தில்லியில் புதிதாக 15 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 15 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,405 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 8 நாள்களாக கரோனா உயிரிழப்புகள் பதிவாகவில்லை. மொத்த பலி எண்ணிக்கை 25,089 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.74 சதவிகிதமாக உள்ளது. அக்டோபரில் இதுவரை இரண்டு உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 6,676 பேருக்கு கரோனா
தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.03 சதவிகிதத்துக்குக் குறைந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 98.23 சதவிகிதமாக உள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, 298 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.