கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் விளக்கம்

​கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை தெரிவித்தார்.

DIN


கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை தெரிவித்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:

"நிபுணர் குழு ஏற்கெனவே அறிக்கை சமர்பித்து விட்டது. நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். பள்ளிகள் திறப்பு மற்றும் அதுபற்றிய அனைத்து விவரங்கள் குறித்தும் கல்வித் துறையுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துவார். இதன்பிறகு, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார் பொம்மை.

கர்நாடகத்தில் கரோனா தொற்று குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 23 முதல் 9-12 வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 6-8 வகுப்புகளுக்குக் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளோம்: தலைமைத் தளபதி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT