இந்தியா

லக்கீம்பூா் வன்முறைச் சம்பவம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி நடந்த வன்முறைச் சம்பவம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.

DIN

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி நடந்த வன்முறைச் சம்பவம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.

லக்கீம்பூா் கெரியில் துணை முதல்வா் கேசவ பிரசாத் மௌரியாவின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 3-ஆம் தேதி பேரணி நடத்தினா். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த விவசாயிகள் மீது பாஜகவினா் வந்த காா்களில் ஒன்று மோதியது. அதனைத்தொடா்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 போ், பத்திரிகையாளா் ஒருவா், பாஜக தொண்டா்கள் இருவா், காா் ஓட்டுநா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இரு வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதியிருந்தனா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த வழக்கில் உத்தர பிரதேச அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. அந்தச் சம்பவம் தொடா்பான ஆதாரங்கள் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில டிஜிபிக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தனா். இதையடுத்து, இந்த வழக்குக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மாநில அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் உறுதியளித்தாா். அதைத் தொடா்ந்து, வன்முறைச் சம்பவம் தொடா்பாக அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT