கேரளம்: செறுதோணி அணையிலலிருந்து நொடிக்கு 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றம் 
இந்தியா

கேரளம்: செறுதோணி அணையிலிருந்து நொடிக்கு 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றம்

கேரள மாநிலம் இடுக்கி செறுதோணி அணையில் மதகுகள் திறக்கப்பட்டு நொடிக்கு 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேறுகிறது.

DIN

கேரள மாநிலம் இடுக்கி செறுதோணி அணையில் மதகுகள் திறக்கப்பட்டு நொடிக்கு 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேறுகிறது.

கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் ஆசியாவிலேயே பெரிய அணையான இடுக்கி செறுதோணி அணை நிரம்பியதால் தண்ணீரை வெளியேற்ற நேற்று (அக்-19) மதகுகள் திறக்கப்பட்டது.

அணை முழுக்க நிரம்பியதால் 3 மதகுகள் வழியாக நொடிக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறுவதாக அதிகாரிகள் தெரிவித்ததால்  அருகே இருக்கும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேசிய பேரிடர் மீட்புப் குழுவினரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இடுக்கி செறுதோணி அணை 1973-ல் பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து இதுவரை 1981 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் இருமுறை மட்டுமே  திறக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் தற்போது கனமழையால்  28 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக அணை திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

மேற்கு மல சாரலிலே... ரோஸ் சர்தானா

ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு பிரிண்டிங் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கண் இரண்டில் மோதி... குஷி தூபே!

SCROLL FOR NEXT