உத்தரகண்ட் நிலச்சரிவு: 46 பேர் பலி 
இந்தியா

உத்தரகண்ட் நிலச்சரிவு: 46 பேர் பலி

உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 46 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

DIN

உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 46 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

உத்தரகண்ட்  மாநிலத்தில் அதிகப்படியான கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

முக்கியமாக சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருவதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த நிலச்சரிவுகளின் மூலம் இதுவரை 46 பேர் வரை பலியாகியிருப்பதாகவும் 11 பேர் மாயமாகியிருப்பதாகவும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி  தெரிவித்திருக்கிறார். மேலும் கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1,09,000 மற்றும் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் நிலைமையின் தீவிரம் அறிந்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உத்தரகண்டின் நிலை குறித்து தெரிந்து கொண்டார். மேலும் மாநிலத்திற்குத் தேவையான நிவாரணம் மற்றும் மீட்புப்பணி உதவிகளை விரைவாக வழங்குவதாகவும் மோடி உறுதியளித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் டிரைலர்!

ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

SCROLL FOR NEXT