இந்தியா

நாட்டை ஏமாற்றி ஏழை மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க முடியாது: மோடி உறுதி

DIN

நாட்டை ஏமாற்றுபவர்களும் ஏழை மக்களிடம் கொள்ளைடிப்பவர்களும் தப்பிக்க முடியாது என பிரதமர் மோடி புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார். மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், மத்திய புலனாய்வு துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மோடி, "ஊழல்கள் சிறிதயாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது மற்றவரின் உரிமைகளைப் பறிக்கிறது. 

நாட்டின் குடிமகனின் உரிமைகளை பறிக்கிறது. தேசத்தின் முன்னேற்றத்தை தடுக்கிறது. ஒரு தேசமாக நமது கூட்டு பலத்தையும் பாதிக்கிறது. நாட்டை ஏமாற்றியவர்கள், ஏழைகளை கொள்ளையடிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், அவர்கள் நாட்டில் மற்றும் உலகில் எங்கிருந்தாலும், அவர்களுக்கு இனி இரக்கம் காட்டப்படாது என அரசு நம்புகிறது.

இடைத்தரகர்கள் இல்லாமல் ஊழல் நடைபெறாமல் அரசின் திட்டங்களால் தங்களால் பயனடைய முடியும் என்று இப்போது மக்கள் நம்புகின்றனர். ஏமாற்றுபவர்களால் இனி தப்பிக்க முடியாது என மக்களும் இப்போது நம்புகிறார்கள். 

ஊழல், அமைப்பின் ஒரு பகுதி என்பதை புதிய இந்தியா ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. வெளிப்படையான அமைப்பு, திறன்மிக்க செயல்முறை, சுமுகமான நிர்வாகம் ஆகியவற்றையே அவர்கள் விரும்புகின்றனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT