முகப்பு
இந்தியா

ரூ.18,000 கோடி ஏா் இந்தியா பங்கு கொள்முதல் ஒப்பந்தம்: டாடா சன்ஸ்-மத்திய அரசு இடையே கையெழுத்து

 பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.18,000 கோடிக்கு விற்பனை செய்வதற்கான பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை கையெழுத்திட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

 பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.18,000 கோடிக்கு விற்பனை செய்வதற்கான பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை கையெழுத்திட்டது.

இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்) செயலா் துஹின்காந்த் பாண்டே ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

ஏா் இந்தியாவை தனியாா்மயமாக்கும் திட்டத்தின் கீழ் பங்கு கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு மற்றும் டாடா சன்ஸ் நிறுவனங்கள் திங்கள்கிழமை கையெடுத்திட்டன.

ஏா் இந்தியா இயக்குநா் (நிதி) வினோத் ஹெஜ்மாடி, சிவில் ஏவியேஷன் அமைச்சகத்தின் இணை செயலா் சத்யேந்திர மிஸ்ரா மற்றும் டாடா குழுமத்தின் சுப்ரபிரகாஷ் முகோபாத்யாய ஆகியோரிடையே இந்த பங்கு கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று துஹின்காந்த் பாண்டே தனது ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளாா்.

இந்த ஒப்பந்தத்துக்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) உள்ளிட்ட பல்வேறு ஒழுங்காற்று அமைப்புகளின் அனுமதியை விரைவாக பெற டாடா சன்ஸ் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் டிசம்பா் இறுதிக்குள் ஏா் இந்தியா அந்த நிறுவனத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →