உத்தரகண்ட்: யானைகள் தாக்கியதில் 6 பெண்கள் படுகாயம்
உத்தரகண்ட் மாநிலத்தில் யானைகள் தாக்கியதில் 6 பெண்கள் படுகாயமடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் யானைகள் தாக்கியதில் 6 பெண்கள் படுகாயமடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் அம்டந்தா கட்டா கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கால்நடைகளுக்குத் தீவனம் வாங்குவதற்காக பிஜ்ரானி பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த யானைகள் முதலில் ஒரு பெண்ணை தாக்கியது. இதைப் பார்த்து மற்ற பெண்கள் ஓட, அவர்களை யானை விரட்டி தாக்கியது.
இதில் 6 பெண்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
பெண்களின் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த வனத்துறையினர் வந்து பெண்களை காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் கூடுதலாக வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.