இந்தியா

5 வயது சிறுவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

DIN

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சேட்டை செய்த 5 வயது சிறுவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமையாசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள அஹ்ரௌரா பள்ளியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியில் படித்துவரும் 5 வயதான சிறுவன் ஆசிரியர் சொல்பேச்சு கேட்காமல் சேட்டை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அந்த சிறுவனுக்கு பயத்தை ஏற்படுத்தும் விதமாக பள்ளி தலைமையாசிரியர் பள்ளி மாடியிலிருந்து அவரது கால்களைப் பிடித்து தலைகீழாக தொங்கவிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

சிறுவனுக்கு அச்சம் ஏற்படுத்துவதற்காக தலைகீழாக மாடியிலிருந்து தொங்கவிட்ட சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். ஆசிரியர்கள் இத்தகைய முறையில் கண்டிப்பது மாணவர்களுக்கு அபாயத்தை விளைவிப்பதாகக் கூறி கல்வியாளர்கள் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT