ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 
இந்தியா

வங்கதேசம் ஹிந்துக்கள் தாக்குதல் சம்பவம்: ஆர்எஸ்எஸ் கண்டனம்

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

DIN

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த அக்.13-ஆம் தேதி துா்கை பூஜை பண்டிகையின்போது கும்மிலா பகுதியில் இஸ்லாமியா்களின் புனித நூலான குா்ஆனின் பிரதி துா்கை சிலையின் பாதத்தில் வைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டு ஹிந்துகளின் வீடுகள், கோயில்கள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறை தொடா்ந்து நடைபெற்ற நிலையில், கடந்த அக்.17-ஆம் தேதி ரங்பூா் என்ற இடத்தில் உள்ள பீா்கஞ்ச் பகுதியில் சுமாா் 20 ஹிந்துக்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடா்பாக கல்லூரி மாணவா் ஷைகத் மண்டல், ரபியுல் இஸ்லாம் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டிருந்தனா். அவா்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய ரங்பூா் மாஜிஸ்திரேட் முன்பு இருவரும் ஆஜா்படுத்தப்பட்டனா்.

பின் ஹிந்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூன்று நாள் அகில இந்திய செயற்குழு கூட்டம் கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளியில் நேற்று(அக்.28) துவங்கியது. தேசிய தலைவர் மோகன் பாகவத், தேசிய பொது செயலர் தத்தாத்ரேயா ஹொசபெலே ஆகியோர் செயற்குழு கூட்டத்தை துவக்கி வைத்தனர்.

இதில் அமைப்பின் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட பின் வங்கதேசத்தில் நடந்த ஹிந்துகளுக்கு எதிரான வன்முறை கலவரத்தைக் கண்டித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT