முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்: கனமழைக்கு இதுவரை 79 பேர் பலி

உத்தரகண்ட்டில் பெய்த கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 29 அக்டோபர், 2021 at 12:59 PM
உத்தரகண்ட்: கனமழைக்கு இதுவரை 79 பேர் பலி
பகிர்:

உத்தரகண்ட்டில் பெய்த கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது. 

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த அக்.17,18,19 தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 79 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது .மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.

கனமழையின் தாக்கம் உத்தர்கண்டில் பல பகுதிகளையும் பாதித்திருந்த நிலையில் மீட்புப்படை மூலம் ஆபத்தான இடத்தில் வசிப்பவர்கள் பலர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.