பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் மாணவர்களை விடுதலை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதமாக தங்களது வாட்ஸ்ஆப் செயலியில் பாராட்டு தெரிவித்த காஷ்மீர் மாணவர்களை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிக்க | நம்பிக்கையை தரட்டும் கிளாஸ்கோ காலநிலை மாநாடு
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கைது நடவடிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.