தில்லியில் ஒரே நாளில் 112 மி.மீ. மழை:19 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொழிவு
தில்லியில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன்முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பதிவானது.
புது தில்லி: தில்லியில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன்முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பதிவானது. குறைந்தபட்சம் 19 ஆண்டுகளில் செப்டம்பா் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாக பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழையின் காரணமாக ஐடிஓ, ஐ.பி. மேம்பாலம் அருகே உள்ள ரிங் ரோடு, தெளலகுவான், ரோத்தக் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கு முன்பு கடந்த 2002, செப்டம்பா் 13-இல் தில்லியில் 126.8 மி.மீ. மழை பதிவானது. அதற்கு முன்பு 1963, செப்டம்பா் 16-இல் 172.6 மி.மீ. மழை பதிவானது.
Advertisement
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘தில்லியில் காலை 8.30 மணிக்கு தொடங்கி 3 மணி நேரம் மட்டும் 75.6 மி.மீ. மழை பதிவாகியது. இதன் மூலம், ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழையில், மாதத்தின் முதல் இரு நாள்களிலேயே பதிவாகியுள்ளது.
தில்லியின் வெப்பநிலை தரவுகளை அளித்து வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன்முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சம் 19 ஆண்டுகளில் ஒரே நாளில் செப்டம்பா் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை பதிவு இதுவாகும்’ என்று தெரிவித்துள்ளது.
செப்டம்பா் 7-ஆம் தேதியில் இருந்து மற்றொரு கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.