முகப்பு
இந்தியா

தில்லியில் கொட்டித் தீர்த்த மழை: ஒரே நாளில் 112 மி.மீ. பதிவு

தில்லியில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன்முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பதிவானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
தில்லியில் புதன்கிழமை பெய்த கனமழையால் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் குளம்போல் தேங்கிய மழைநீர்.
பகிர்:



புது தில்லி: தில்லியில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன்முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பதிவானது. குறைந்தபட்சம் 19 ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாக பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த மழையின் காரணமாக ஐடிஓ, ஐ.பி. மேம்பாலம் அருகே உள்ள ரிங் ரோடு, தௌலகுவான், ரோத்தக் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதற்கு முன்பு கடந்த 2002, செப்டம்பர் 13}இல் தில்லியில் 126.8 மி.மீ. மழை பதிவானது. அதற்கு முன்பு 1963, செப்டம்பர் 16}இல் 172.6 மி.மீ. மழை பதிவானது. 

Advertisement

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மேலும் கூறுகையில், "தில்லியில் காலை 8.30 மணிக்கு தொடங்கி 3 மணி நேரம் மட்டும் 75.6 மி.மீ. மழை பதிவாகியது. இதன் மூலம், ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழையில், மாதத்தின் முதல் இரு நாள்களிலேயே பதிவாகியுள்ளது.

தில்லியின் வெப்பநிலை தரவுகளை அளித்து வரும் சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன்முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சம் 19 ஆண்டுகளில் ஒரே நாளில் செப்டம்பர் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை பதிவு இதுவாகும்' என்று தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 7}ஆம் தேதியில் இருந்து மற்றொரு கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தில்லியில் புதன்கிழமை பெய்த கனமழையால் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் குளம்போல் தேங்கிய மழைநீர். (வலது) கனமழையால் மஹிபால் பூர் மேம்பாலத்திலிருந்து அருவி போல கொட்டும் மழைநீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments