இந்தியா

ராஜஸ்தான் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் காலடி தடங்கள்

DIN

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் மூன்று வென்வேறு வகையான டைனோசர்களின் காலடித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் வாழ்ந்த டைனோசர் விலங்குகள் இயற்கை பேரழிவுகள் காரணமாக அழிந்தன. டைனோசர்களின் எச்சங்கள் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் டைனோசர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்சால்மர் மாவட்டத்தில் 20 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூன்று வெவ்வேறு வகை டைனோசர்களின் காலடி தடங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வண்டல் மண் பகுதியில் பதிவான இந்தக் காலடித் தடங்கள் கால வேகத்தில் கற்களாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டைனோசரின் தடங்கள் 35 சென்டி மீட்டரும், மற்றொரு வகை டைனோசரின் தடம் 5.5 சென்டி மீட்டரும் கொண்டவையாக உள்ளன.

இந்திய மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வில் பங்குபெற்ற டாக்டர்.பரிஹார், ஜெய்சால்மர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் டைனோசர்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மிக முக்கியமானது எனத் தெரிவித்தார்.

மேலும், “இது ராஜஸ்தானில் டைனோசர் எச்சங்களின் கண்டுபிடிப்புகளுக்கான ஆரம்பம். எதிர்காலத்தில் மேலும் டைனோசர் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT