இந்தியா

இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாரலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் இடம் உண்டு: பிரதமர்

DIN

இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாரலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு என பிரதர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர் சுட்டுரையில் பிரதமர் கூறியதாவது: ‘‘இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ்-க்கு எப்போதும் சிறப்பான இடம் உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டி, ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் இருக்கும் மற்றும் பல தலைமுறை விளையாட்டு வீரர்கள், விளையாட்டுகளை தொடர ஊக்குவிக்கும். நமது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன் மற்றும் ஊற்சாகத்தின் ஊற்று.

இந்தியா வென்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கங்கள், நமது மனதை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளன. இதற்காக விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை பாராட்ட விரும்புகிறேன். விளையாட்டுகளில் நமது வெற்றிகள் அதிக பங்கேற்பை உறுதி செய்யும் என நம்புகிறோம். 

நான் முன்பு கூறியது போல், ஜப்பான், குறிப்பாக டோக்கியோ மக்கள் மற்றும் ஜப்பான் அரசு, தனித்துவமான விருந்தோம்பல், முக்கிய விஷயங்களை கவனித்தது, அதிகம் தேவையான மீள் தகவல்களை பரப்பியது, இந்த ஒலிம்பிக் மூலம் ஒன்றாக இருந்தது ஆகியவற்றுக்காக பாராட்டப்பட வேண்டும்’’ என கூறியுள்ளார்.

பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. டோக்யோ பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்றுள்ள இந்தியா பதக்கப் பட்டியலில் 24ஆவது இடத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT