அசாம் : இன்று (செப்-6) பள்ளிகள் , கல்லூரிகள் திறப்பு
கரோனாவின் தீவிரம் கட்டுக்குள் இருக்கும் மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று (செப்-6) முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
கரோனாவின் தீவிரம் கட்டுக்குள் இருக்கும் மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று (செப்-6) முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இதையும் படிக்க | நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்
ஒராண்டுக்கு மேலாக இணைய வகுப்பில் பாடம் கற்று வந்த மாணவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
இருப்பினும் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதிப்படிப்பில் இருக்கும் மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1-11 வகுப்பில் பயிலும் மாணவர்களும் கல்லூரி முதலாமண்டு , இரண்டாம் ஆண்டு மாணவர்களும் எப்போதும் போல் இணையவழிக் கல்வியையே பின் தொடரலாம் என்று கல்வித்துறை சார்பில் அறிவித்திருக்கிறார்கள்.