இந்தியா

ஜேஇஇ தேர்வு முறைகேடு: அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

DIN

தில்லியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இல்லத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் திங்கள் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நீட், ஜேஇஇ தேர்வு முறைகேடிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். 

நாடு முழுவதும் செப்டம்பர் 2-ம் தேதி 20 இடங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் ஜேஇஇ முதன்மைத் தேர்வு நடைபெற்றது. 

தேசிய தேர்வு முகமை சார்பில் நடைபெற்ற இந்த தேர்வில் ரூ.15 லட்சம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக 7 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 

இது தொடர்பாக கல்வித் துறையை சேர்ந்த 3 பேரை செப்டம்பர் 9-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில், இதனைக் கண்டித்தும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தில்லியில் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இல்லத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறிய போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT