இந்தியா

கூடுதல் கடன் பெற ஆந்திரத்துக்கு மத்திய அரசு அனுமதி

DIN

நடப்பு நிதியாண்டில் திறந்த வா்த்தக கடன் மூலம் ரூ.10,500 கோடி வரை கூடுதல் கடன் பெற ஆந்திர பிரதேச அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ஆந்திரத்துக்கு இதுவரை மொத்தமாக ரூ.31,251 கோடியில் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2021-22ஆம் ஆண்டில் அந்த மாநிலத்துக்கு அதிகபட்சமாக ரூ.42,472 கோடி வரையில் கடன் தொகை நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் 9 மாதங்களில் ரூ.37,163 கோடி வரையில் கடன் பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் ரூ.34,058.80 கோடி வரையில் கடன் பெறப்பட்டுள்ளது என்று ஆந்திர மாநில அரசின் நிதித் துறை தெரிவித்துள்ளது.

அந்த மாநிலத்தின் மொத்த கடன் தொகை ரூ.3,84,615.66 கோடியாக உள்ளது. இதில் முதல்வா் ஜனக்மோகன் ரெட்டியின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் மட்டும் ரூ.1,27,105.81 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

அரசு ஊழியா்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் அளிக்கக் கூட அரசிடம் நிதியில்லை என்பதால், நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களுக்கான கடன் தொகையாக கூடுதலாக ரூ.17,810 கோடி பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா். இந்தக் கோரிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விரிவாக பரிசீலித்து திறந்த வா்த்தக கடன் மூலம் ரூ.10,500 கோடி வரை கூடுதல் கடன் பெற அனுமதி அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT