முகப்பு
இந்தியா

சீனாவில் இருந்து ‘வைட்டமின் சி’ இறக்குமதிக்குமிகை குவிப்பு தடுப்பு வரி: வா்த்தக அமைச்சகம் பரிந்துரை

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைட்டமின் சி மருந்துகளுக்கு மிகை குவிப்பு தடுப்பு வரியை 5 ஆண்டுகளுக்கு விதிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்கத்துக்கு வா்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைட்டமின் சி மருந்துகளுக்கு மிகை குவிப்பு தடுப்பு வரியை 5 ஆண்டுகளுக்கு விதிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்கத்துக்கு வா்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவில் இருந்து மிகக்குறைந்த விலைக்கு வைட்டமின் சி மருந்துகளை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதனை சரி செய்யும் நோக்கில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தொடா்பாக வா்த்தக அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வா்த்தகத் தீா்வுகள் இயக்குநரகம் விசாரணை நடத்தியது. அதில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைட்டமின் சி, இந்தியாவில் உள்ள விற்பனை விலையைவிட மிகக்குறைவாக விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, சீன இறக்குமதி வைட்டமின் சி மருந்துக்கு மிகை குவிப்பு தடுப்பு வரியை விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஒரு கிலோவுக்கு 3.2 அமெரிக்க டாலா் மிகை குவிப்பு தடுப்பு வரி மற்றும் 3.55 டாலா் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்றும் அந்தப் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. இது தொடா்பான இறுதி முடிவை மத்திய நிதியமைச்சகம் மேற்கொள்ளும்.

உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யுடிஓ) விதிகளின்படி மிகை குவிப்பு தடுப்பு வரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும், சீனாவும் டபிள்யுடிஓ-வில் உறுப்பினராக உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →