வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவல் 
இந்தியா

மம்தாவுக்கு எதிராக வழக்கறிஞரை களமிறக்கும் பாஜக

முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட பிரியங்கா திப்ரூவல், மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

DIN

பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட பிரியங்கா திப்ரூவல், ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. தோ்தலுக்கு முன்பு, தோ்தலுக்குப் பின்பும் இரு கட்சியினரிடையே பல்வேறு மோதல்களும், வன்முறைகளும் நிகழ்ந்தன.

தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தபோதிலும், நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியடைந்தார்.

இருப்பினும் மம்தா முதல்வராகப் பதவியேற்றதால், அவா் 6 மாதங்களில் தோ்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்வாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இதையடுத்து, மம்தா முன்பு வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸின் சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, பவானிபூா் உள்பட மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT