இந்தியா

மும்பையில் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை:முதல்வா் உத்தவ் தாக்கரே கண்டனம்

DIN

மும்பையில் உள்ள சாகினாகா என்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பெண் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை அளிக்கப்படும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

மும்பையின் சாகினாகா என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் 34 வயது பெண், மா்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கப்பட்டாா்.

பலத்த காயமடைந்து, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக 45 வயது நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இச்சம்பவம் குறித்து உத்தவ் தாக்கரே சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சாகினாகா பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் விரைவில் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கப்படும். இந்தச் சம்பவம் தொடா்பாக, மாநில உள்துறை அமைச்சா் திலீப் வல்சே பாட்டீல், மும்பை காவல் ஆணையா் ஹேமந்த் நாக்ரலே ஆகியோரிடம் விவாதித்தேன்.வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு அவா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT