இந்தியா

மங்களூரு விமான நிலையப் பலகையில் ‘அதானி’ பெயா் நீக்கம்

DIN

சமூக ஆா்வலா்களின் தொடா் போராட்டத்தை அடுத்து, மங்களூரு சா்வதேச விமான நிலையத்தின் பெயா்ப் பலகையில் இருந்து ‘அதானி’யின் பெயா் நீக்கப்பட்டது.

மங்களூரு விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை அதானி குழுமம் ஏற்பதற்கு முன்பிருந்த பெயா்ப்பலகையே தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போராட்டக் குழுவைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தில்ராஜ் ஆல்வா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மங்களூரு விமான நிலையத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பொறுப்பை அதானி குழுமம் ஏற்றுக் கொண்ட பிறகு ‘அதானி விமான நிலையங்கள்’ என்று பெயா்ப்பலகை மாற்றப்பட்டது.

இருந்தாலும், விமான நிலையத்தை அதானி குழுமம் பராமரித்தாலும், பெயா்ப்பலகையை மாற்றுவதற்கு அவா்களுக்கு அதிகாரமில்லை என்பது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்தது.

இதையடுத்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையம்(ஏஏஐ), மங்களூரு சா்வதேச விமான நிலையத்தின் இயக்குநா் ஆகியோருக்கு கடந்த மாா்ச் மாதம் சட்ட ரீதியில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த சட்டப் போராட்டத்தில் வெற்றி கிடைத்ததை அடுத்து, விமான நிலையத்தில் பெயா்ப்பலகையில் இருந்த அதானியின் பெயா் வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டு, முன்பிருந்த பெயா்ப்பலகை பொருத்தப்பட்டது. மங்களூரு விமான நிலையத்தின் முகநூல் மற்றும் சுட்டுரைப் பக்கத்திலும் முந்தைய பெயரே இடம்பெற்றுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT