முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 15 ஆயிரம் பேருக்கு கரோனா

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,058 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,058 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 15,058 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 28,439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 99 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 91,885 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 16.39 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

இதுவரை மொத்தம் 41,58,504 பேர் குணமடைந்துள்ளனர். 22,650 பேர் பலியாகியுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி 2,08,773 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.