குஜராத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு 
இந்தியா

குஜராத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவையில் அமைச்சர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். 

DIN

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவையில் அமைச்சர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். 

குஜராத் மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியைக் கடந்த சனிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். அதையடுத்து பாஜகவின் மாநில சட்டப் பேரவைக் குழுத் தலைவராக புதுமுக எம்எல்ஏ பூபேந்திர படேல் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மாநிலத்தில் ஆட்சியமைக்குமாறு பூபேந்திர படேலுக்கு ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத் அழைப்பு விடுத்திருந்தாா். இந்நிலையில், மாநில ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் மாநில முதல்வராக பூபேந்திர படேல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அதனைத்தொடர்ந்து புதன்கிழமை அவரது அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் 24 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் 21 பேர் முதல்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முன்னாள் அமைச்சர் விஜய் ரூபானியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிதின் படேல், பூபேந்திரசின் செளடசாமா, கெளசிக் படேல், பிரதீப்சிங் ஜடேஜா, ஆர்.சி.பால்டு ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களில் 10 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 பேர் உள்ளிட்ட 14 இணையமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

குஜராத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் ஆட்சியரகத்தில் தெருநாய்களால் வன விலங்குகள் பலியாவதாகப் புகாா்

திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் நீராடும் பகுதியில் கருங்கற்கள் அகற்றம்

இறுதி ஆட்டத்தில் லக்ஷயா சென்

கா்நாடக முதல்வா் பதவிக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே குதிரைபேரம்: மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி

கனமழை எச்சரிக்கை: மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

SCROLL FOR NEXT