பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் , நினைவுப் பொருள்கள் இன்று(செப்-17) முதல் இணைய வழியாக ஏலம் விடப்படுகிறது.
பிரதமரின் முக்கிய நிகழ்ச்சிகள் , சந்திப்புகள் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட பல பரிசுகள் மற்றும் நினைவுப் பொருள்களை ஏலம் விட கலாச்சாரத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது இன்று முதல் இணைய வழியிலான ஏலத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | 2021 ஆம் ஆண்டில் வாங்குவதற்கான 7 சிறந்த 5ஜி ஸ்மார்ட் கைபேசிகள்
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிடைத்த விளையாட்டுச் சாதனங்கள் , அயோத்தி ராமர் கோயில், சர்தாம், ருத்ராக்ஷ் மாநாட்டு மையம் ஆகியவற்றின் மாதிரிகள், சிற்பங்கள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் உட்பட பல பொருட்கள் உள்ளன.
இந்த ஏலம் வருகிற அக்-7 ஆம் தேதி வரை நடைபெறும் என கலாச்சாரத்துறை தெரிவித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.