இந்தியா

ஹிமாசல்: அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி

DIN

ஹிமாசலப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவுள்ளதாக அறிவித்தது.

698 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள ஹிமாசல்கில் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. பாஜகவின் ஜெய் ராம் தாக்குர் முதல்வராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், அடுத்த ஆண்டு பிற்பாதியில் சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிவடையவுள்ளதால், நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், தில்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி ஹிமாசல் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 

ஏற்கெனவே பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளிடையே ஆம் ஆத்மியும் வேட்பாளர்களை தயார் செய்து தேர்தலுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT