இந்தியா

ம.பி.யில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன

DIN

மத்தியப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

கரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று  1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. 

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறுகிறது. முகக்கவசம், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT