முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவருடன் குஜராத் முதல்வர் சந்திப்பு

தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் திங்கள்கிழமை நேரில் சந்தித்தார்.

Updated On : 20 செப்டம்பர், 2021 at 12:53 PM
குடியரசுத் தலைவருடன் குஜராத் முதல்வர் சந்திப்பு
பகிர்:

தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் திங்கள்கிழமை நேரில் சந்தித்தார்.

குஜராத் மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில் செப்டம்பர் 13ஆம் தேதி புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார்.

இந்நிலையில், பதவியேற்ற பின் முதல்முறையாக தில்லி சென்றுள்ள குஜராத் முதல்வர், இன்று காலை குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்களையும் பூபேந்திர படேல் சந்திக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.