இந்தியா

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் செப். 24-இல் சந்திப்பு: வெள்ளை மாளிகை

DIN


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24-ம் தேதி சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அறிவித்தது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ள 'க்வாட்' அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்க புறப்படுகிறார். இதில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்துவார் என முன்பு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் வெள்ளை மாளிகை இதனை உறுதிபடுத்தியுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை அமெரிக்க அதிபர் பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT