இந்தியா

செல்ல நாயுடன் விமானத்தில் பயணிக்க ரூ.2.4 லட்சம் செலவிட்ட இளைஞர்

DIN


புது தில்லி: செல்லப்பிராணிகள் மீதான அன்பை பலரும் பல விதங்களில் வெளிப்படுத்துவார்கள், சென்னையைச் சேர்ந்த நபர், தனது செல்ல நாயுடன் விமனத்தில் பயணிக்க, ஏர் இந்தியா விமானத்தின் ஒட்டுமொத்த  வணிக வகுப்பு இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார்.

வணிகப் வகுப்பு டிக்கெட் ஒன்றின் விலை ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இருக்கும். ஒரு விமானத்தில் சுமார் 12 இருக்கைககள் இருக்கும் நிலையில், அனைத்தையும் ஒரே நபர் முன்பதிவு செய்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.2.4 லட்சம் செலவானது. சுமார் இரண்டு மணி நேர விமானப் பயணத்துக்கு அவர் தனது செல்லப் பிராணியுடன் வருவதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டுள்ளார்.

பொதுவாகவே விமானங்களில் செல்லப்பிராணிகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சில விதிமுறைகளுடன், செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு வர ஏர் இந்தியா அனுமதி வழங்கும். இதற்காகக் கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கும்.

ஒருவேளை, வணிக வகுப்பில் செல்லப் பிராணியுடன் ஒரு பயணி பயணிக்க விரும்பினால் அவர்களுக்கு கடைசி இருக்கைதான் ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை ஏர் இந்தியா உள்ளூர் விமானத்தில் சுமார் 2000 செல்லப் பிராணிகள் பயணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT