உ.பி.யில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் 
இந்தியா

உ.பி.யில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்

உத்தரப் பிரதேசத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IANS

உத்தரப் பிரதேசத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரேலி மாவட்டத்தில் உள்ள பூட்டா கிராமத்தில் வீட்டிற்கு வெளியே கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி 9 வயதுடைய சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் இருக்கும் 13 வயதுடைய சிறுவன், அச்சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இதையடுத்து, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் காயத்தை காட்டியுள்ளார். 

இந்த சம்பவத்தை அறிந்த சிறுவனின் பெற்றோர், கிராம பஞ்சாயாத்து மூலம் சமரசத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். எனினும், சிறுமியின் பெற்றோர்கள் பஞ்சாயத்தின் சமரசத்தை ஏற்க மறுத்ததால் வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்.19) சிறுமியின் தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பரேலி காவல் கண்காணிப்பாளர் ரோஹித் சிங் சஜ்வான் கூறுகையில், 

"இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளது. சிறுமியின் உறவினர்கள் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பில் குழு அமைத்து கிராமம் முழுவதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.”
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT