இந்தியா

புற்றுநோயாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி போடலாம்; பக்க விளைவுகள் இல்லை: ஆய்வு

DIN


புற்றுநோயாளிகளும் கரோனா தடுப்பூசி  போட்டுக்கொள்ளலாம் என்று ஆய்வு முடிவு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 

பொதுமக்களைப் போன்று புற்றுநோயாளிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நோய் எதிர்ப்புதிறன் அதிகரிப்பதுடன் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த புற்றுநோய்க்கான ஐரோப்பிய மருத்துவ அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. 

மேலும் இந்த நிறுவனம், கரோனா தடுப்பூசி மூன்றாவது தவணையாக 'பூஸ்டர்' தடுப்பூசியை போட்டுக்கொள்ள பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் கரோனவால் பாதிக்கப்படுவோரிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

கரோனா தடுப்பூசி பரிசோதனையின்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை உட்படுத்தாமல் கரோனா தடுப்பூசி மேம்படுத்தப்பட்டது.

புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்கெனவே பலவீனமாகியிருக்கும். அவர்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கான கரோனா தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதனையடுத்து நெதர்லாந்து நாட்டில் நான்கு குழுக்கள் மூலம் பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த 791 புற்றுநோயாளிகளுக்கு ’மாடர்னா’ தடுப்பூசியை இரண்டு தவணை செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற்று நோயாளிகள் என இரு தரப்பினரையும் ஒருசேர தடுப்பூசி செலுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அவர்கள் இருதரப்பினருக்கும் நோய் எதிர்ப்பு சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சையும், கீமோ-நோய் எதிர்ப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

28 நாள்கள் கழித்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டபோது அவர்களது ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வில் ஈடுபடாத, இத்தாலில் உள்ள ஐரோப்பிய புற்றுநோய் நிறுவனத்தைச் சேர்ந்த நுரையீரல் புற்றுநோய் நிபுணர் அண்டானியோ பஸ்ஸாரோ இது குறித்து பேசியபோது,

''பரிசோதனை நடத்தப்பட்டவர்களிடம் தடுப்பூசியின் அதிகபட்ச செயல்திறன் வெளிப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சையை பொருட்படுத்தாமல், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவர்கள் தங்களது நோயாளிகளை ஊக்குவிக்கலாம். ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT