முகப்பு
இந்தியா

பெங்களூருவில் டிரக் மீது ரயில் மோதி விபத்து

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டிரக் மீது மைசூரு - மயிலாடுதுறை விரைவு ரயில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Updated On : 21 செப்டம்பர், 2021 at 10:44 AM
பெங்களூருவில் டிரக் மீது ரயில் மோதி விபத்து
பகிர்:


பெங்களூரு: தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டிரக் மீது மைசூரு - மயிலாடுதுறை விரைவு ரயில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

திங்கள்கிழமை இரவு 8.35 மணியளவில் கார்மேலராம் - ஹீலாலிஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நேரிட்டது.

சுமார் 1380 பயணிகளுடன் கார்மேலராம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டிரக் மீது ரயில் மோதியது.

Advertisement

விபத்து நடந்ததும், டிரக்கை ஓட்டி வந்த ஓட்டுநர், அதிலிருந்து குதித்து தப்பியோடியுள்ளார்.

டிரக் காலியாக இருந்த நிலையில், ரயில் மோதிய வேகத்தில் டிரக் சுக்குநூறாக உடைந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, ரயில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்று, ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.