இந்தியா

கரோனா இழப்பீட்டில் மத்திய அரசுக்கும் பங்குள்ளது: பினராயி

DIN

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசுக்கும் பங்குள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

கரோனாவால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், நிதிச்சுமையிலுள்ள மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசுக்கும் பங்குள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், மாநிலத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாநில அரசு சார்பில் நிதியுதவி அளிப்பது சாத்தியமில்லாதது.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூற முடியாது. 

மத்திய அரசும் மாநில அரசுகளுக்கு போதிய நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT