இந்தியா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

DIN

கனடா நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

கனடாவில் 2023 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தலை அறிவித்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கரோனாவுக்கு எதிராக தன்னுடைய அரசு சிறப்பாக செயலாற்றியதை தன்வசமாக்க நினைத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியைமைப்பதற்குத் தேவையான 170 இடங்கள் அன்றி முந்தைய தேர்தலைப் போலவே 157 இடங்கள் பெற்றது. இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டீன் ட்ரூடோ மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். 

இதையடுத்து, பல்வேறு நாட்டுத் தலைவர்கள், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.  இந்தியா-கனடா உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து உங்களுடன் பணியாற்ற எதிர்நோக்குகிறேன். அத்துடன் உலகளாவிய மற்றும் பலதரப்பட்ட பிரச்னைகளில் நம்முடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மசினகுடியில் ரேஷன் கடையின் ஷட்டரை மீண்டும் உடைத்த காட்டு யானை

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

அதிக மகசூலுக்கு கோடைஉழவு மேற்கொள்ள அறிவுறுத்தல்

குன்னூா்-கோத்தகிரி  சாலையில்   மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பலா பழங்களை ருசிக்கும் யானை

SCROLL FOR NEXT