கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்தியாவிற்குள் ஊடுருவிய தீவிரவாதிகளை ராணுவத்தினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

ANI

ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்தியாவிற்குள் ஊடுருவிய தீவிரவாதிகளை ராணுவத்தினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையான உரி அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இன்று அதிகாலை 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.

இதைக் கண்ட இந்திய ராணுவத்தினர் அவர்கள் மூன்று பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி 5, சிறிய ரக துப்பாக்கி 8, கையெறி குண்டுகள் 70 உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையை இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இதேபோன்ற ஊடுருவல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT