இந்தியா

தில்லி : 300 நாட்களைக் கடந்த விவசாயிகள் போராட்டம்

DIN

தில்லியில் கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளால் தொடங்கப்பட்ட போராட்டம் 300 நாட்களைக் கடந்திருக்கிறது.

விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் எனக் கருதப்படும் வேளாண் சட்டத்தை எதிர்த்து சம்யுக்த கிசான் மோர்ச்சா என்கிற அமைப்பின் கீழ் பல்வேறு மாநிலத்தின் விவசாயிகளும் தில்லியின் எல்லைப் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டு 300 நாட்களை நிறைவு செய்திருக்கிறது.

இதுவரை விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்படாததால் போராட்டத்தை நீட்டிக்க இருப்பதாகவும் வருகிற செப்-27 ஆம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT