இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

DIN


ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தின் காஷ்வாவில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

பயங்கரவாதி ஒருவன் சோபியான் சித்ராகம் காலன் பகுதியில் புதன்கிழமை மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கிராம மக்களை மிரட்டி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்து மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதி பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதையடுத்து பக்கத்து வீடுகளில் இருந்த மக்களை பத்திரமாக வெளியேற்றிவிட்டு, பயங்கரவாதி மீது தாக்குதலை தொடர்ந்தனர். 

பின்னர், தான் சரணடைவதாக தெரிவித்தார், ஆனால் அவர் சரணடையவில்லை. பின்னர், பாதுகாப்புப் படையினர் நடத்திய தூப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். 

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி அனயத் அஷ்ரப் தார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார், அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, அவர் ஏற்கனவே போதைப்பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்போது பயங்கரவாதியாக மாறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடம்பூா் மலைப் பகுதியில் கனமழை: தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

பா்கூா் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

100 நாள் வேலைத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரம்: தமிழக-கா்நாடக சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT