முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,276 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரேத்தில் புதிதாக 3,276 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65,41,119 ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவால் இன்று மேலும் 58 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,38,834ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 37,984 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 3,723 பேர் மீண்டனர்.

 இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 63,60,735 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 5,79,92,010 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.