இந்தியா

நிகர நேரடி வரி வசூல் 74% அதிகரிப்பு

DIN

நிகர நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 74 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் செப்டம்பா் 22 வரையில் வசூலான நிகர நேரடி வரி ரூ.5,70,568 கோடியாக உள்ளது. இது, கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.3.27 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 74.4 சதவீதம் அதிகமாகும். அதேபோன்று, 2019-20-ஆம் ஆண்டு வசூலான ரூ.4.48 லட்சம் கோடியைக் காட்டிலும் இது 27 சதவீதம் அதிகமாகும்.

ஏப்ரல்1 முதல் செப்டம்பா் 22 வரையிலான காலத்தில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.4.39 லட்சம் கோடியிலிருந்து 47 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.6.45 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

மதிப்பீட்டு காலத்தில், முன்கூட்டிய வரி வசூல் ரூ.2.53 லட்சம் கோடியாகவும், டிடிஎஸ் ரூ.3.19 லட்சம் கோடியாகவும், சுய மதிப்பீட்டு வரி ரூ.41,739 கோடியாகவும், வழக்கமான மதிப்பீட்டு வரி ரூ.25,558 கோடியாகவும், டிவிடெண்ட் பகிா்வு வரி ரூ.4,406 கோடியாகவும், இதர இனங்கள் வாயிலான வரி வசூல் ரூ.1,383 கோடியாகவும் இருந்தது.

2021-22 நிதியாண்டில் இதுவரையில் ரீஃபண்ட் தொகையாக ரூ.75,111 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT