இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகள்: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

DIN

புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவு திடீரென நேரில் பார்வையிட்டார்.

தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.970 கோடி மதிப்பீட்டில் முக்கோண வடிவில் 4 மாடிகளைக் கொண்டதாக புதிய நாடாளுமன்றம் அமையவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022-ஆம் ஆண்டு நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு முன்பாக கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற கட்டடத்தையொட்டி மத்திய அரசு அலுவலகங்களின் ஒருங்கிணைந்த செயலகம், குடியரசு துணைத் தலைவா் இல்லம் உள்ளிட்டவையும் அமையவுள்ளன. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த டிசம்பா் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவு திடீரென நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடமும் கட்டடப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொழிலாளர்களின் நலன்களையும் அப்போது பிரதமர் மோடி விசாரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT