பண்டிகைக் காலம் நெருங்குவதால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து செயல்பட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா எழுதிய கடிதத்தில்,
திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளது. கரோனா தொற்று குறைந்து வரும் நிலையிலும், தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை மாநில அரசுகள் பிறப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.