இந்தியா

'விவசாயிகள் போராட்டத்தில் ஊடகங்களும் இணைய வேண்டும்'

DIN


வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களும் விவசாயிகளுடன் இணைய வேண்டும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்தீஸ்கர் மாநில விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கேள்வி எழுப்புவோம். விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

மாநில காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் பலனடைவது குறித்தும் அவர்களுக்காக இயற்ற வேண்டிய விதிகள் குறித்தும் அரசுடன் விவாதிக்கவுள்ளோம் என்று கூறினார். 

அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மத்திய அரசால் அடுத்து ஊடகங்கள் குறிவைக்கப்படலாம். ஊடகங்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் விவசாயிகளுடன் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT