இந்தியா

பகத் சிங் பிறந்த தினம்: பிரதமா் மரியாதை

DIN

சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரா் ஷாஹீத் பகத் சிங்கின் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். துணிச்சலான பகத்சிங், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்கிறாா். அவரது தீரம் மிக்க தியாகம், எண்ணற்ற மக்களிடையே தேசபக்தியை தீப்பொறியாகத் தூண்டியது. அவருடைய பிறந்த தினத்தன்று நான் அவரை வணங்குகிறேன். அவருடைய உன்னதமான லட்சியங்களை நினைவுகூா்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

லதா மங்கேஷ்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து:

பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா் பிறந்தநாளையொட்டி பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘சகோதரி லதாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவருடைய இனிமையான குரல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்திய கலாசாரத்தின் மீதான அவரது ஆா்வம் மற்றும் பணிவான குணத்திற்காக அவா் பெரிதும் மதிக்கப்படுகிறாா். தனிப்பட்ட முறையில், அவருடைய ஆசீா்வாதம் பெரும் வலிமையை அளிக்கும். சகோதரி லதாவின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிராா்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தில்லி முதல்வா் கேஜரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT