முகப்பு
இந்தியா

ஹிந்து இளைஞனை மணந்த இஸ்லாமிய சிறுமி மாயம்: 66 நாள்கள் கழித்து மீட்பு

திரிபுராவில் ஹிந்து இளைஞரை மணந்த இஸ்லாமிய சிறுமி மாயமானதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் 66 நாள்கள் கழித்து சிறுமியை மீட்டனர்.

Updated On : 28 செப்டம்பர் 2021, 5:21 pm IST
ஹிந்து இளைஞனை மணந்த இஸ்லாமிய சிறுமி மாயம்: 66 நாள்கள் கழித்து மீட்பு
பகிர்:

திரிபுராவில் ஹிந்து இளைஞரை மணந்த இஸ்லாமிய சிறுமி மாயமானதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் 66 நாள்கள் கழித்து சிறுமியை மீட்டனர்.  

திரிபுரா மாநிலத்தில் தர்மாநகர் பகுதியைச் சேர்ந்த சுமன் சங்கர் என்ற 23 வயதுடைய இளைஞர் பிஷால்கர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. 

பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சிறுமியை, இளைஞர் சுமன் ஹிந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டு சிறுமியை மதமாற்றம் செய்துள்ளார். 

Advertisement

Advertisement

ஆனால், திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் தந்தை துலால் மியா என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

எனினும் காவல் துறை அதிக நாட்டம் செலுத்தாததால் சிறுமியின் தந்தை நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த நீதிமன்றம், சிறுமியைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து செபாஹிஜாலா மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான குழு தேடுதல் பணியில் ஈடுபட்டு நேற்று சிறுமியைக் கண்டுபிடித்தது.

இது தொடர்பாக பேசிய காவல் கண்காணிப்பாளர் கிருஷ்னேண்டு சர்க்ரவர்த்தி, சிறுமி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் ஹிந்துத்துவா அமைப்பை சேர்ந்த தலைவர் தபான் திப்நாத் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments