முகப்பு
மும்பையில் அக்.4 முதல் 8-12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
இந்தியா

மும்பையில் அக்.4 முதல் 8-12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

மும்பையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 8 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் 4ம் தேதி பள்ளிகளைத் திறக்க மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
மும்பையில் அக்.4 முதல் 8-12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
பகிர்:

மும்பை: மும்பையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 8 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் 4ம் தேதி பள்ளிகளைத் திறக்க மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சாஹல் கூறுகையில், 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் மாதத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.

பள்ளிகள் அனைத்தும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம், மாநில கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாத் வெளியிட்ட அறிவிப்பில், அக்டோபர் 4 முதல் பள்ளிகளைத் திறக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்திருப்பதாகவும், கிராமங்களில் 5 முதல் 12ஆம் வகுப்புகளுக்கும், நகரப் பகுதிகளில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகளைத் திறக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
முழு கட்டுரையைப் படிக்க →