முகப்பு
இந்தியா

இந்தியாவில் இன்று மேலும் 35,499 பேருக்கு கரோனா; 447 போ் பலி

இந்தியாவில் இன்று மேலும் 35,499 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

இந்தியாவில் இன்று மேலும் 35,499 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,499 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,19,69,954 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 447 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,28,309 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 39,686 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,11,39,457 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 4,02,188 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 17,06,598 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 13,71,871 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 

இதுவரை மொத்தம் 48,17,67,232 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.