முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 21,445 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 21,445 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 21,445 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"கேரளத்தில் புதிதாக 21,445 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,45,582 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 14.73 சதவிகிதம்.

கடந்த நாள்களில் 160 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 18,280 ஆக உயர்ந்துள்ளது. 

கேரளத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 73 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 20,316 பேர் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 945 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் 20,723 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,36,318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,76,518 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.