முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று புதிதாக 19,451 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று புதிதாக 19,451 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

கேரளத்தில் இன்று புதிதாக 19,451 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,39,223 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 19,451 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரத்தில் 3,038 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,51,089ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 105 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 18,499ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,80,240 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 

கரோனாவிலிருந்து இன்று 19,104 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,72,278ஆக உயர்ந்துள்ளது. 28,297 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.